உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நீங்கள் நலமா புதிய திட்டம் மக்களிடம் கருத்து கேட்பு

நீங்கள் நலமா புதிய திட்டம் மக்களிடம் கருத்து கேட்பு

நாமக்கல், மார்ச் 7-மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் உரியவர்களுக்கு சென்று சேருவதை உறுதி செய்யும் நோக்குடன், 'நீங்கள் நலமா' என்ற புதிய திட்டம், நேற்று துவங்கப்பட்டது.இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் பின்னுாட்டங்கள், இதற்கென உருவாக்கப்படும், 'நீங்கள் நலமா' வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இந்த திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின், நேற்று துவக்கி வைத்து, மகளிர் உரிமை திட்டம், முதல்வரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், 'புதுமைப் பெண்' திட்டம், பணிபுரியும் மகளிருக்கான விடுதி திட்டமான, 'தோழி' திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் பயன்பாடுகள் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.அதையடுத்து, நாமக்கல் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து, எம்.பி., ராஜேஸ்குமார், அரசு திட்டங்களின் பயன்கள் குறித்து பொதுமக்களிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு கருத்துக்களை கேட்டறிந்தார்.தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, கலெக்டர் உமா, அரசு திட்டங்களின் பயன்கள் குறித்து, பொதுமக்களிடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டு கருத்துக்களை கேட்டறிந்தார். தனித்துணை கலெக்டர் பிரபாகரன், ஆர்.டி.ஓ., பார்த்திபன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை