அரசு கல்லுாரியில் கலைத்திருவிழா
ராசிபுரம், தமிழக அரசு, உயர் கல்வித்துறை சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கு கலைத்திருவிழா நடத்த ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு அரசு கல்லுாரியிலும், செப்., 16ல் தொடங்கி அக்., 7 வரை நடத்தப்படுகிறது. ராசிபுரம் திருவள்ளூர் அரசு கலை கல்லுாரியில், நேற்று கலைத்திருவிழா நடந்தது. கல்லுாரி முதல்வர் யூசப் கான் தலைமை வகித்தார். இதில், 32 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. விழாவில் கல்லுாரி முதல்வர் பேசுகையில், ''கல்லுாரி மாணவ, மாணவர்களின் தனித்திறன்களையும், கலைத்திறன்களையும் உலகறிய செய்ய தமிழக அரசும், உயர் கல்வித்துறையும் மாணவர்களுக்கு மாபெரும் வாய்ப்பை கலைத்திருவிழா மூலம் கொடுத்துள்ளது. இதன்மூலம் மாணவர்களின் பல்வேறு திறன்கள் அறியப்படுகின்றன,'' என்றார்.