உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அர்த்தநாரீஸ்வரர் தேர் பணி: எம்.எல்.ஏ., ஆய்வு

அர்த்தநாரீஸ்வரர் தேர் பணி: எம்.எல்.ஏ., ஆய்வு

திருச்செங்கோடு, : திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் பெரிய தேர், 2 கோடியே, 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தேர் கட்டுமான பணி நடந்து வருகிறது. திருவாரூர் ஆழித்தேர் ஸ்தபதி இளவரசன் தலைமையில், 20 பேர் கொண்ட குழுவினர் பூதபார், பூதபார் பீடம், சிறிய உருதாரம், பெரிய உருதாரம், நடகாசனம், தேவாசனம், சிம்மாசனம் என, ஏழு நிலைகளில், 80 டன் இலுப்பை மரம், 10 டன் வேம்பு, 10 டன் தேக்கு உள்ளிட்ட மரங்களை கொண்டு, 22 அடி உயரம், 22 அடி அகலம் கொண்ட இரும்பு அச்சுடன் கூடிய தேர் கட்டுமான பணி, 80 சதவீதம் முடிவடைந்துள்ளது. இப்பணியை, திருச்செங்கோடு கெ.ம.தே.க.,-எம்.எல்ஏ., ஈஸ்வரன், அர்த்தநாரீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, திருச்செங்கோடு நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு, கோவில் உதவி ஆணையர் ரமணிகாந்தன் மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்