உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விசாரணைக்கு வந்த பெற்றோர் மாற்று சான்றிதழுக்கு காத்திருப்பு

விசாரணைக்கு வந்த பெற்றோர் மாற்று சான்றிதழுக்கு காத்திருப்பு

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, அலமேடு அரசு பள்ளியில் படிக்கும் மாணவியர் சிலர், தங்களது பெற்றோர்களுடன் அமைச்சர், மாவட்ட கலெக்டரின் காரை முற்றுகையிட்டு, தலைமையாசி-ரியர், ஆசிரியர்கள் மீது பாலியல் புகாரளித்தனர்.இந்த புகாரை தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை, வருவாய்த்-துறை, குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள், நேற்று காலை, 10:00 மணிக்கு பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே, மாணவரின் பெற்றோர் ஒருவர், வேறு பள்ளியில் தன் மகனை சேர்த்துக்கொள்-வதாக கூறி, அழைத்துச் சென்றார்.இதுகுறித்து, மாணவரின் தந்தை கூறுகையில், 'ஆசிரியர்களை நம்-பித்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். தற்போது பள்ளியில் நடக்கும் பிரச்னையால் பாதுகாப்பு இல்லை என, தெரி-கிறது.என் குழந்தைகளுக்கு பாதுகாப்பு தேவை என்பதால், வேறு பள்-ளியில் சேர்க்க அழைத்து செல்கிறோம். மாற்றுச்சான்றிழ் வாங்க காத்திருக்கிறேன்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை