உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புகையிலை பாதிப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

புகையிலை பாதிப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, அரசு பள்ளியில் புகையிலை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நாமகிரிப்பேட்டை அடுத்த, ஆர்.பி.காட்டூர் அரசு தொடக்கப் பள்ளியில் புகையிலை பழக்கம் தடுப்பு மற்றும் புகையிலை பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் பற்றி விழிப்புணர்வ ஏற்படுத்தப்பட்டது. தானும், தன் சுற்றத்தாரும் புகையிலை உபயோகப்படுத்த மாட்டோம் என பள்ளி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். புகையிலை பழக்கம் எவ்வாறு ஏற்படும், அது நம்மை எவ்வாறு அடிமைப்படுத்தும் எனவும் விளக்கமாக கூறினர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர், ஊழியர்கள், ஆசிரியர் உள்ளிட்டோர் மாணவர்களுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி