உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விழிப்புணர்வு ஓவியங்களுடன் மின்வாரிய அலுவலக சுற்றுச்சுவர்

விழிப்புணர்வு ஓவியங்களுடன் மின்வாரிய அலுவலக சுற்றுச்சுவர்

ப.வேலுார்: தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின், ப.வேலுார் வட்டார உதவி செயற்பொறியாளர் அலுவலகம் மற்றும் துணை பண்டக சாலை, ப.வேலுார் கபிலர்மலை செல்லும் சாலையில் அமைந்-துள்ளது. இங்கு உதவி செயற்பொறியாளர் அலுவலகம், அதே அலுவலகத்தில் உதவி மின் பொறியாளர் அலுவலகம், துணை பண்டகசாலை மேற்பார்வையாளர் அலுவலகம் மற்றும் கட்டு-மான அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன.அலுவலக சுற்றுச்சுவரில் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்-வேறு அமைப்பினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அலங்கோலமாக காட்சியளித்தது. இதனால், காம்பவுண்ட் சுவரை புதுப்பித்திட மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர். அதில், பொது மக்களிடையே மின்சார பயன்பாடு குறித்தும் மின்சாதனங்-களை பாதுகாப்பாக கையாள்வது தொடர்பாகவும் விழிப்புணர்வு வண்ண ஓவியங்கள் வரையப்பட்டன.மேலும் மின் கசிவு கையாளும் முறை, மின்சாரத்தில் இருந்து பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து தத்துரூபமாக ஓவியங்கள் வரையப்பட்டன. மேலும், சோலார் மின்சார வசதியை வீடுகளில் ஏற்படுத்துவது தொடர்பாகவும், அந்த திட்டத்திற்கு மத்திய அரசின் மானியம் தொடர்பாகவும், ஓவியம் வரையப்பட்டுள்ளது. இதை அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள், ஆச்சரியத்-துடன் பார்த்தனர். மேலும், பள்ளி மாணவ, மாணவிகளும் அவற்றை பார்த்து படித்துவிட்டு செல்வது பயனுள்ளதாக அமைந்-துள்ளது. மின்வாரிய அதிகாரிகளின் இந்த முயற்சிக்கு பொது-மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி