உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாணவர்களின் எதிர்காலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மாணவர்களின் எதிர்காலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மல்ல சமுத்திரம், மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நேற்று மாணவர்களின் எதிர்காலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் மாணிக்கம் தலைமை வகித்தார். கல்வி ஆலோசகர் யுவராஜ், 'பெற்றோர்களே உங்கள் சொத்து; அவர்களை சிறந்த முறையில் பாதுகாக்க வேண்டும்; புத்தகங்கள் நிறைய படித்து அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்; போதை பொருட்களுக்கு அடிமையாகாமல் உடல்நலத்தை சிறந்த முறையில் பேணிகாக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். 9 முதல் பிளஸ் 2 மாணவர்கள், 500 பேர் கலந்துகொண்டனர். மல்லசமுத்திரம் இன்ஸ்பெக்டர் சுதா, எஸ்.ஐ., ரஞ்சித்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை