உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வாழைத்தார் விலை சரிவு

வாழைத்தார் விலை சரிவு

ப.வேலுார்: -நாமக்கல் மாவட்டம், ப.வேலுார், பரமத்தி, பொத்தனுார், நன்செய் இடையாறு உள்ளிட்ட காவிரி கரையோர கிராமங்களில், 1,000 ஏக்கர் பரப்பளவில், வாழை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு பூவன், ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட வாழை ரகங்கள் அதிகளவில் பயிரிடப்படுகின்றன. அறுவடை செய்யப்படும் வாழைத்தார்களை, ப.வேலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தினசரி வாழை மார்க்கெட்டில் விற்பனை செய்கின்றனர். கடந்த வாரம், 500 ரூபாய்க்கு விற்ற பூவன் தார், நேற்று, 400 ரூபாய்; 400 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாளி தார், 350 ரூபாய்; ஐந்து ரூபாய்க்கு விற்ற ஒரு மொந்தன் வாழை, மூன்று ரூபாயாக குறைந்துள்ளது. 'முகூர்த்த சீசன் இல்லாததால், விற்பனை சரிந்துள்ளது. தீபாவளி பண்டிகை வரை, வாழை விலையில் சரிவு இருக்கும். அதன் பின்னரே விலை அதிகரிக்கும்' என, வாழை விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி