உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வாழைத்தார் விலை உயர்வு

வாழைத்தார் விலை உயர்வு

வாழைத்தார் விலை உயர்வு ப.வேலுார், டிச. 8--ப.வேலுார் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் வாழை சாகுபடி அதிகளவில் நடக்கிறது. இங்கு, பூவன், பச்சைநாடன், கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட ரகங்கள் பயிரிடப்படுகின்றன. தற்போது, விளைந்த வாழைத்தார்களை வெட்டி, ப.வேலுார் தினசரி ஏல மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். நேற்று நடந்த ஏலத்திற்கு, 400 வாழைத்தார்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கடந்த வாரம், 300 ரூபாய்க்கு விற்ற பூவன் வாழைத்தார், நேற்று, 400 ரூபாய்; 300 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாளி, 400 ரூபாய்; 250 ரூபாய்க்கு விற்ற கற்பூரவல்லி, 350 ரூபாய், 5 ரூபாய்க்கு விற்ற மொந்தன் காய் ஒன்று, 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி