உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கேரளாவில் பரவியது பறவை காய்ச்சல் தமிழக கோழிப்பண்ணைகளில் உஷார்

கேரளாவில் பரவியது பறவை காய்ச்சல் தமிழக கோழிப்பண்ணைகளில் உஷார்

நாமக்கல்: கேரளாவில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்-பட்டதால், நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்-ணைகளில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நட-வடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கேரளா மாநிலம், ஆலப்புழா, கோட்டயம் மாவட்-டங்களில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த ஏராளமான கோழி, வாத்து, காடைகள், திடீர் திடீரென செத்து மடிந்துள்ளன. இதையறிந்த கால்நடை பாதுகாப்புத்துறை அதிகாரிகள், இறந்த பறவைகளின் ரத்த மாதிரியை சேகரித்து புனேவில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். அதில், உயிரிழந்த பறவைகளுக்கு, 'எச்1, என்1' பறவை காய்ச்சல் பரவியிருந்தது உறுதி செய்-யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்-ளன.தடுப்பூசிநோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கோழி, காடை, வாத்து இறைச்சி மற்றும் முட்டைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்ப-குதிகளில் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழி, வாத்து, காடைகளை அழிக்க கால்நடை பாதுகாப்-புத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்நிலையில், தமிழகத்தில் அதிகளவில் கோழிப்பண்ணைகள் உள்ள நாமக்கல் மாவட்-டத்தில், பண்ணையாளர்கள், பாதுகாப்பு நடவடிக்-கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். முன்னதாக, கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். நாமக்கல், சேலம், ஈரோடு உள்-ளிட்ட பகுதிகளில், 1,000க்கும் மேற்பட்ட முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு, 6 கோடிக்கும் அதிகமான முட்டையின கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தற்போது, கோழிகளுக்கு கிருமிநாசினி மருந்து தெளித்தல் உள்ளிட்ட நோய்த்தடுப்பு நடவடிக்-கைகளை பண்ணையாளர்கள் தீவிரமாக மேற்-கொண்டு வருகின்றனர். கோழிப்பண்ணை வாசலில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கலந்த தண்ணீர் வைக்கப்பட்டு, வெளி ஆட்களும், வாகனங்களும் அதன் வழியாக மட்-டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வெளியில் இருந்து வரும் வாகனங்களை கிருமிநாசினி தெளித்த பின்னரே பண்ணைக்குள் அனுமதிக்கின்றனர்.பரவ வாய்ப்பில்லைஇதுகுறித்து, பண்ணை உரிமையாளர்கள் கூறிய-தாவது:நாமக்கல் பகுதியில் நிலவும் தட்பவெப்ப நிலை மற்றும் பண்ணைகளில் பின்பற்றப்படும் பயோ செக்யூரிட்டி முறைகளால், பறவை காய்ச்சல் நோய் கிரு-மிகள், நாமக்கல் பகுதியில் பரவ வாய்ப்பு இல்லை என, வல்லுனர் குழு தெரிவித்திருந்தாலும், நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள கோழிப்-பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை-களை தீவிரப்படுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை