மேலும் செய்திகள்
சி.எம்.டி.ஏ., பணியிடங்கள் புதிதாக 119 உருவாக்கம்
06-Oct-2024
தார்ச்சாலை பணி தொடங்காததால்உண்ணாவிரதம் இருக்க பா.ஜ., முடிவு நாமகிரிப்பேட்டை, அக். 29-நாமகிரிப்பேட்டை யூனியன், மூலக்குறிச்சியில் இருந்து பெரிய கோம்பை செல்லும் சாலை அமைக்க, பிரதமரின் கிராம சதக் யோஜனா திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக டெண்டர் விடப்பட்டு, ஐந்து மாதங்களாகியும் வேலை தொடங்காமல் இருந்தது. கடந்த மாதம், 22ல் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பூமி பூஜை செய்து சாலைப்பணியை தொடங்கி வைத்தார். ஆனாலும், இதுவரை பணிகள் தொடங்கவில்லை.இதுகுறித்து, தமிழக பா.ஜ., மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவின் மாநில துணைத்தலைவர் லோகோந்திரன் வெளியிட்ட அறிக்கை: கிராம சாலைகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதன் கீழ் மூலக்குறிச்சியில் சாலை அமைக்க, கடந்த, 5 மாதங்களுக்கு முன் டெண்டர் விடப்பட்டது. கடந்த மாதம் அமைச்சர் மதிவேந்தன் பூமி பூஜை போட்டு பணியை தொடங்கி வைத்தார். ஆனாலும், இதுவரை பணிகள் எதுவும் தொடங்கவில்லை. மத்திய அரசு ஒதுக்கும் நிதியிலும் ஒரு தலைபட்சமாக மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. இதனை கண்டித்து, பா.ஜ., கட்சி சார்பில் பொதுமக்களுடன் சேர்ந்து தார்ச்சாலை பணி தொடங்கும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளோம். உண்ணாவிரதம், நவ., 4ல் தொடங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
06-Oct-2024