உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பைக் மீது டாரஸ் லாரி மோதி பா.ஜ., நிர்வாகியின் மகன் பலி

பைக் மீது டாரஸ் லாரி மோதி பா.ஜ., நிர்வாகியின் மகன் பலி

நாமகிரிப்பேட்டை, பைக் மீது டாரஸ் லாரி மோதிய விபத்தில், பா.ஜ., நிர்வாகியின் மகன் பலியானார்.நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளி வடக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணன், 50; பா.ஜ., ஒன்றிய பொருளாளர். இவரது மகன் விக்னேஷ், 25; இவரும், கிளை பொறுப்பாளராக இருந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, நண்பனை பார்ப்பதற்காக, நாமகிரிப்பேட்டை அடுத்த மெட்டாலாவுக்கு, டி.வி.எஸ்., அப்பாச்சி பைக்கில் புறப்பட்டார். தலைக்கவசம் அணியவில்லை. தண்ணீர் பந்தல்காடு அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த டாரஸ் லாரி, இவரது பைக் மீது மோதியது. இதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே விக்னேஷ் பலியானார். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி