மேலும் செய்திகள்
துணிப்பை ஆர்டர் கிடைக்குமா?
25-Sep-2024
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில், விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. ஏராளமானோர் இந்த விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தி தீபாவளி போனஸ் ஒப்பந்தம் போடப்படும்.அதன்படி, இந்தாண்டு தீபாவளி போனஸ் வழங்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர், பள்ளிப்பாளையம் வட்டார விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகிகளுக்கு கடிதம் கொடுத்தனர். ஆனால், உரிமையாளர்கள் சங்கத்தினர் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. இதனால், பள்ளிப்பாளையம் வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தை கண்டித்து, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் அசோகன் கூறியதாவது: போனஸ் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்து, கடந்த, 5ல் பள்ளிப்பாளையம் வட்டார விசைத்தறி உரிமையாளர் சங்கத்திற்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த, 10ல் முதல்வர், மாவட்ட கலெக்டருக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை பள்ளிப்பாளையம் வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தில் இருந்து போனஸ் பேச்சு வார்த்தைக்கு அழைக்க வில்லை. எனவே, பள்ளிப்பாளையம் வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தை கண்டித்தும், அரசு தலையிட்டு உடனடியாக போனஸ் பேச்சுவார்த்தை துவக்க வேண்டும் என, வலிறுத்தியும், இன்று ஆவத்திபாளையம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தவும், வரும் ஞாயிற்றுக்கிழமை தொழிலாளர்களை திரட்டி பள்ளிப்பாளையம் பஸ் ஸ்டாண்டில் பட்டை நாமம் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
25-Sep-2024