உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கோவிலுக்கு சென்றபோது பாழியில் விழுந்து சிறுவன் பலி

கோவிலுக்கு சென்றபோது பாழியில் விழுந்து சிறுவன் பலி

பள்ளிப்பாளையம் பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த சவுதாபுரம் பகுதியை சேர்ந்தவர் பூபதி; சலுான் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் விஷாந்த், 8; அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்தார்.நேற்று மாலை, 5:00 மணிக்கு, பூபதி, தன் குடும்பத்தாருடன், ரங்கனுார் நால்ரோடு பகுதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்றார். கோவில் அருகே, 15 அடி ஆழத்தில் பாழி ஒன்று உள்ளது. இதில், தண்ணீர் எப்போதும் நிரம்பி காணப்படும். இந்நிலையில், இந்த பாழி அருகே விஷாந்த் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த பாழியில் விஷாந்த் தவறி விழுந்துவிட்டான். சிறுவனை காணாமல் பெற்றோர் தேடியுள்ளனர். அப்போது, 'சிறுவன் பாழி அருகே விளையாடிக்கொண்டிருந்ததாக' அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, வெப்படை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படை வீரர்கள், பாழியில் இறங்கி தேடினர். ஒரு மணி நேர தேடலுக்கு பின், விஷாந்த் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வெப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி