மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
ப.வேலுார், ஈரோடு மாவட்டம், வெங்கம்பூர், வெற்றிகோனார் பாளையத்தை சேர்ந்த பெரியசாமி மகன் அரவிந்த் மாரியப்பன், 14. பள்ளிக்கு செல்லாமல் கூலி வேலை செய்து வந்தார்.இந்நிலையில், ப.வேலுார் அருகே, குப்பிச்சிபாளையம் மண்டபத்து பாறையில் உள்ள தேங்காய் மண்டியில் குடும்பத்துடன் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம், அதே பகுதியில் வசிக்கும் தன் உறவினர் வீட்டுக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு சென்ற அரவிந்த் மாரியப்பன், மீண்டும் வீடு திரும்பவில்லை.இதையடுத்து குடும்பத்தினர், இரவு, 7:00 மணிக்கு தேடியபோது, அதே பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை கவனிக்காமல் மிதித்ததில், மின்சாரம் தாக்கி அரவிந்த் மாரியப்பன் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து, ப.வேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.