உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அண்ணன், தம்பிக்கு வலை

அண்ணன், தம்பிக்கு வலை

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அருகே, ஓலப்பாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியர் தங்கவேல், 43, காந்திமதி, 37; தங்கவேல் ரிக்வண்டி மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.இருவருக்கும் திருமணமாகி, 12 ஆண்டுகள் ஆகிறது. 11 வயதில் கீர்த்தி என்ற மகள் உள்ளார். இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒரே பகுதியில் தனித்-தனியாக வசித்து வருகின்றனர். கடந்த, 4ல் தங்கவேல் மற்றும் அவரது தம்பி நந்தகுமார், 30, ஆகியோர், காந்திமதியை தாக்கியுள்ளனர். காயமடைந்த அவர், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். காந்திமதி அளித்த புகார்படி, எலச்சிபாளையம் போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள தங்கவேல், நந்தகுமாரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை