புனித தலத்துக்கு பயணம் மேற்கொள்ள புத்த, சமண, சீக்கியர்களுக்கு அழைப்பு
நாமக்கல், நாமக்கல் கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தை சேர்ந்த, 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர், 20 சீக்கிய மதத்தினர், இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு, புனித பயணம் மேற்கொள்ள, தமிழக அரசால், ஆண்டுதோறும் ஒருவருக்கு, 10,000 வீதம், 120 பேருக்கு, மொத்தம், 12 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ், பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் புத்த, சமண, சீக்கியர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ், கடந்த, 1க்கு பின் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கு, 'இ.சி.எஸ்.,' முறையில் நேரடியாக மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெறலாம். மேலும், www.bcmbcmw.tn.gov.inஎன்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வரும், நவ., 30க்குள் உரிய ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.