திடீர் மழையால் வியாபாரம் பாதிப்பு
திடீர் மழையால்வியாபாரம் பாதிப்புராசிபுரம், அக். 11-ராசிபுரம் பகுதியில், நேற்று இரவு பெய்த திடீர் மழையால் ஆயுத பூஜை வியாபாரம் பாதிக்கப்பட்டது. ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில், நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் சுற்று வட்டாரப்பகுதியில் நேற்று மதியம் துாறலுடன் சிறிது நேரம் மழை பெய்தது. இரவு, 7:30 மணிக்கு கன மழையாக மாறியது. இதனால் ஆயுத பூஜை வியாபாரம் பாதிக்கப்பட்டது. பொரி, கடலை, பூ, பழக்கடைகளில் கூட்டம் குறைந்தது. வழக்கமாக ஆயுத பூஜை தினத்திற்கு முதல்நாள் இரவு, 12:00 மணிவரை பூஜை பொருட்கள் விற்பனையாகும். திடீர் மழையால் நேற்று இரவு, 8:00 மணிக்கே வியாபாரம் முடிவுக்கு வந்தது என்று வியாபாரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.