உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / உழவர் சேவை மையம் அமைக்க வேளாண் பட்டதாரிக்கு அழைப்பு

உழவர் சேவை மையம் அமைக்க வேளாண் பட்டதாரிக்கு அழைப்பு

நாமகிரிப்பேட்டை;நாமகிரிப்பேட்டை வட்டார உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர் முரளி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தமிழகத்தில் ஆண்டுதோறும் வேளாண் பட்டதாரிகள், பட்டயதாரர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் விதமாக, முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படுகின்றன. நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில், தோட்டக்கலை துறை மூலம் இத்திட்டத்தின் கீழ், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான உழவர் நல சேவை மையம் அமைக்க, 30 சதவீதம் மானியமாக, 3 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.வயது வரம்பு, 20லிருந்து, 45க்குள் இருக்க வேண்டும். வேளாண்மை அல்லது தோட்டக்கலை அல்லது வேளாண் வணிகம் அல்லது வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு அல்லது பட்டய படிப்பு படித்திருக்க வேண்டும். அரசு, அரசு சார் நிறுவனத்தில் பணியில் இருக்க கூடாது. சொந்த இடம் அல்லது வாடகை, குத்தகை ஒப்பந்தம் இருக்க வேண்டும். 300 சதுரடி கார்பெட் பரப்பு இருக்க வேண்டும்.உழவர் நல சேவை மையத்தில், விதைகள் , உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி வினியோகம், மண் மற்றும் நீர் மாதிரி ஆய்வு செய்திட உதவுதல், நுண்ணீர் பாசன திட்டம், பயிர் காப்பீட்டு திட்டம், ட்ரோன் சேவை, பயிர் கடன், கால்நடை தீவனம், வேளாண் இயந்திரங்கள் பழுது பார்க்கும் பட்டறை ஆகியவை கிடைக்கும். இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் நபர்கள் உரிய வங்கியில் விரிவான திட்ட அறிக்கையுடன் கடன் பெற விண்ணப்பிக்க வேண்டும். வங்கி நடைமுறைகளைப் பின்பற்றி கடன் ஒப்புதல் பெறப்பட்ட பின் திட்டத்தில் மானிய உதவி பெற வேண்டி இணையதளத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு, 6382513334 என்ற மொபைல் போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை