மேலும் செய்திகள்
கிக் தொழிலாளர்களுக்கு மின்சார டூவீலர் மானியம்
24-Jul-2025
நாமக்கல், 'நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. அவற்றை இணையம் சார்ந்த தொழிலாளர் பங்கேற்று பயன்பெறலாம்' என, கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தின் மூலம், தமிழக உடலுழைப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், இணையம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களை, நல வாரியத்தில் அதிகளவில் பதிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதையடுத்து, நாமக்கல், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகங்கள், மாவட்ட பதிவாளர் அலுவலகம் எதிரில், ஆயுதப்படை காவல் வளாகம் செல்லும் வழி, நல்லிபாளையம், நாமக்கல்--637003, தொலைபேசி எண், 04286--280220 என்ற அலுவலகத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, காலை, 10:00 முதல் மதியம், 12:00 மணி வரை சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.மேற்கண்ட தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், tnuwwb.tn.gov.inஎன்ற இணைய வழியில் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யலாம். 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்-2025' நாமக்கல் மாவட்டத்தில், அனைத்து பஞ்., டவுன் பஞ்., நகராட்சி மற்றும் மாநகராட்சியில், கடந்த, 15 முதல் நடந்து வருகிறது. இம்முகாமில் அதிகளவில் இணையம் சார்ந்த தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்கள் பதிவு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24-Jul-2025