உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இன்று கல்விக்கடன் முகாம் மாணவர்களுக்கு அழைப்பு

இன்று கல்விக்கடன் முகாம் மாணவர்களுக்கு அழைப்பு

குமாரபாளையம், 'குமாரபாளையம் நகரில், இன்று கல்விக்கடன் முகாம் நடக்க உள்ளது. அதில், மாணவர்கள் பங்கேற்கலாம்' என, நகராட்சி கமிஷனர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:நாமக்கல் கலெக்டர் உத்தரவுப்படி, கல்விக்கடன் வழங்கும் முகாம், குமாரபாளையம் நகராட்சியில் உள்ள நடராஜ திருமண மண்டபத்தில், இன்று காலை, 9:00 மணி முதல் மாலை, 1:00 மணி வரை நடக்கவுள்ளது. மாணவ, மாணவியர் பங்கேற்று, உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து கல்விக்கடன் பெற்று, பயன்பெற அழைக்கிறோம். அந்தந்த பகுதி கவுன்சிலர்கள், தங்கள் வார்டு பகுதியில் உள்ள மாணவ, மாணவியர்களை, இந்த முகாமில் பங்கேற்று பயன்பெற அறிவுறுத்த வேண்டுகிறோம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை