உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பிளக்ஸ் பேனர் வைத்த பா.ஜ.,வினர் 2 பேர் மீது வழக்கு

பிளக்ஸ் பேனர் வைத்த பா.ஜ.,வினர் 2 பேர் மீது வழக்கு

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, காளப்பநாய்க்கன்பட்டி டவுன் பஞ்., பஸ் ஸ்டாப் அருகே, பா.ஜ., சார்பில், பஹல்காமில் நடந்த பயங்-கரவாத தாக்குதலை கண்டித்தும், உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்-தது. இதை பார்த்த அப்பகுதியை சேர்ந்த சிலர், இதை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், சமூக வலைத-ளங்களில் பரப்பி விட்டனர்.இதனால், நேற்று முன்தினம் இரவு அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார், சர்ச்சைக்குரிய பேனரை அகற்றி, செந்தில்குமரன், இளங்குமரன் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனால், காளப்பநாய்க்கன்பட்-டியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ