உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காந்திஜெயந்தி அன்று விடுமுறை அளிக்காத 37 நிறுவனங்களின் உரிமையாளர் மீது வழக்கு

காந்திஜெயந்தி அன்று விடுமுறை அளிக்காத 37 நிறுவனங்களின் உரிமையாளர் மீது வழக்கு

நாமக்கல், சென்னை தொழிலாளர் ஆணையர் ராமன், கூடுதல் தொழிலாளர் ஆணையர் சாந்தி, தொழிலாளர் இணை ஆணையர் மாதவன் ஆகியோர் உத்தரவுப்படி, நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து மேற்பார்வையில், தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால், நேற்று காந்திஜெயந்தி தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதில், 24 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 13 கடை மற்றும் வணிக நிறுவனங்களிலும்; 30 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்ததில், 23 உணவு நிறுவனங்களிலும்; 4 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில், ஒரு மோட்டார் போக்குவரத்து நிறுவனம் என, மொத்தம், 58 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அதில், 37 நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு காந்தி ஜெயந்தி தினத்தன்று விடுமுறை அளிக்காமலும், அன்றைய தினம் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு, இரட்டிப்பு சம்பளம் வழங்க அல்லது மாற்று விடுப்பு வழங்க, 24 மணி நேரத்திற்கு முன் அறிவிப்பு வழங்கி, அதன் நகலை சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுக்கு அனுப்பி ஒப்புதல் பெறாமல் பணிக்கு அமர்த்தியது கண்டறியப்பட்டது.'மேற்கண்ட, 37 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது, தமிழக தொழில் நிறுவனங்கள் (தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாட்கள்) சட்டத்தின் கீழ், வழக்கு தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது' என, நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை