உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நீதிமன்றம் வந்த போலீசாரை தடுத்த வாலிபர் மீது வழக்கு

நீதிமன்றம் வந்த போலீசாரை தடுத்த வாலிபர் மீது வழக்கு

நாமக்கல் :திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த துரைசாமி மகன் கார்த்திக், 34; இவர் முசிறி போக்குவரத்து காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர், 2024ல் முசிறி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றியபோது தனிப்படையில் டிரைவராக இருந்தார். அப்போது, மதுவிலக்கு தொடர்பான வழக்கில், நாமக்கல் மாவட்டம், கொசவம்பட்டி, வ.உ.சி., நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் வீரா என்கிற வீரகுமாரனை, 38, கைது செய்தனர். இது தொடர்பாக நடந்து வரும் வழக்கு ஒன்றில் சேந்தமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜராக, நேற்று கார்த்திக் வந்திருந்தார்.அப்போது அங்கிருந்த வீரா மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு வாலிபர் என, இருவரும் கார்த்திக்கை வழிமறித்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கார்த்திக் கொடுத்த புகார்படி, சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ