உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மரவள்ளி கிழங்கு விலை சரிவு

மரவள்ளி கிழங்கு விலை சரிவு

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் வட்டார பகுதியான பேளுக்குறிச்சி, கல்குறிச்சி, மேலப்பட்டி, சிங்களாந்தபுரம், திருமலைப்பட்டி, கண்ணுார் பட்டி, மின்னாம்பள்ளி மற்றும் கொல்லிமலை பகுதிகளில், மர-வள்ளி கிழங்கை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்துள்-ளனர். இங்கு விளையும் மரவள்ளி கிழங்கை வியாபாரிகள் வாங்கி செல்லப்பம்பட்டி, ஆத்துார், நாமகிரிப்பேட்டை பகுதிகளில் உள்ள சேகோ பேக்டரிகளுக்கு, ஜவ்வரிசி தயாரிக்க அனுப்பி வைக்கின்றனர்.தற்போது சேகோ பேக்டரியில் ஜவ்வரிசி உற்பத்தி அதிகமாக நடந்து வருகிறது. கடந்த வாரம் மரவள்ளி கிழங்கு ஒரு டன், 6,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது சேந்தமங்-கலம் சுற்று வட்டாரத்தில், அறுவடை செய்யும் பணி நடப்பதால் வரத்து அதிகரித்துள்ளது. அதனால் ஒரு டன்னுக்கு, 1,000 குறைந்து, 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல், சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு கடந்த வாரம் ஒரு டன், 7,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்-போது, 1,000 குறைந்து, 6,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படு-கிறது. மரவள்ளி கிழங்கு விலை சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ