திருக்குறள் தேர்வில் கலந்துகொண்ட மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்
ராசிபுரம்: தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ராசிபுரம், பாரதிதாசன் சாலையில் உள்ள நகராட்சி நடுநிலை பள்ளியில், மாணவர்களுக்கு திருக்-குறள் பயிற்சி நடந்து வருகிறது. வாரந்தோறும் சனிக்கிழமை நடக்கும் இப்பயிற்சி, நேற்று, 12வது வாரமாக நடந்தது. பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி தலைமை வகித்து பேசினார். அதில், திருக்குறள் ஒப்புயர்வற்ற உலகியல் நுால்; சாதி, மத, நாடு மொழி வேற்றுமை கடந்த உலக பொது நுால்; உலகியல் நெறியை அகம் புறம் என்று வகுத்து அவற்றுக்கு இலக்கணம் வகுத்த பெருமை தமிழுக்கும், தமிழனுக்குந்தான் உண்டு; தமி-ழரின் தலை நிமிர்ந்த வாழ்விற்கு உயிர்நாடியாய் விளங்குவது திருக்குறள் தான் என்றார்.இதுவரை பயிற்சி நடந்த, 24 அதிகாரத்தில் தேர்வு வைக்கப்-பட்டு, அதில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் நகராட்சி சேர்மன் கவிதா பாராட்டு சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில், பாரதிதாசன் நடுநிலைப்பள்ளி மாணவ மாணவியர், கோனேரிப்-பட்டி நகராட்சி தொடக்கப்பள்ளி, எஸ்.ஆர்.வி., பெண்கள் மேல்-நிலைப்பள்ளி மாணவியர், தேசிய மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியர் கலந்து கொண்டனர்.