சேந்தை பெருமாள் கோவிலில் தேர் திருவிழா கொடியேற்றம்
சேந்தமங்கலம்: சேந்தமங்கலத்தில், பிரசித்தி பெற்ற லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் சோமேஸ்வரர் கோவில்கள் அமைந்துள்ளன. நைனாமலை வருதராஜ பெருமாள் கோவிலின், உப கோவில்களான இங்கு, ஆண்டுதோறும் மாசி மாதம் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெறும். அதன்படி, நேற்று காலை, லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திருக்கொடியேற்று விழா நடந்தது. முன்னதாக, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதேபோல், சோமேஸ்வரர் கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு பூஜை செய்யப்பட்டது. நேற்று இரவு ஹம்சவாகனம், சிம்ம வாகனத்தில் சுவாமி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.