அரசு மகளிர் கல்லுாரியில் வேதியியல் மன்ற கூட்டம்
நாமக்கல்: நாமக்கல், அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் வேதியியல் மன்ற கூட்டம் நடந்தது. நாமக்கல், கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில் வேதியியல் துறை சார்பில் நடந்த, வேதியியல் மன்ற கூட்டத்திற்கு, கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்தார். சிறப்பாளராக சேலம் அரசு கலைக் கல்லுாரி வேதியியல் துறை இணை பேராசிரியர் பார்வதி, 'வேதியியலில் நுண்ணுயிரிவியல்' என்ற தலைப்பில் பேசினார். திருச்செங்கோடு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வேதியியல் துறை துணை பேராசிரியர் மற்றும் துணைத் தலைவர் கந்தசாமி,' வேதியியலில் தற்போதைய செய்திகள்' என்ற தலைப்பில் பேசினார். ஏராளமான மாணவியர் பங்கேற்றனர்.