முதல்வர் நாமக்கல் வருகை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு
முதல்வர் நாமக்கல் வருகைஅமைச்சர் மதிவேந்தன் ஆய்வுநாமக்கல், அக். 22-முதல்வர் வருகையையொட்டி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தார்.தமிழக முதல்வர் ஸ்டாலின், நாமக்கல் மாவட்டத்திற்கு இன்று வருகை தர உள்ளார். அதையொட்டி, கலெக்டர் உமா தலைமையில், எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலையில், தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், பொம்மைக்குட்டைமேட்டில் அமைக்கப்பட்டுள்ள, நாமக்கல் மாநகராட்சி டாக்டர் கலைஞர் நுாற்றாண்டு பஸ் ஸ்டாண்ட், பரமத்தி சாலை, செலம்பகவுண்டர் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.துணை மேயர் பூபதி, மாநகராட்சி கமிஷனர் மகேஸ்வரி, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.