உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி:கலெக்டர், வன அலுவலர், சி.இ.ஓ., பங்கேற்பு

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி:கலெக்டர், வன அலுவலர், சி.இ.ஓ., பங்கேற்பு

நாமக்கல்:நாமக்கல்லில் நடந்த முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில், அரசு அலுவலர்கள் பிரிவு டென்னிஸ் போட்டியில், கலெக்டர் துர்கா மூர்த்தி விளையாடினார்.இந்த ஆண்டுக்கான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி, மாவட்ட மற்றும் மண்டல அளவில் நடந்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என, 5 பிரிவுகளில், 178 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.நாமக்கல் மாவட்ட விளையாட்டரங்கில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. தனி நபர் போட்டிகளில், மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் பரிசு, ஒரு லட்சம் ரூபாய், இரண்டாம் பரிசு, 75,000 ரூபாய், மூன்றாம் பரிசு, 50,000 ரூபாய் வழங்கப்படும்.குழு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் பரிசு, தலா, 75,000 ரூபாய், இரண்டாம் பரிசு, தலா, 50,000 ரூபாய், மூன்றாம் பரிசு, தலா, 25,000 ரூபாய் வழங்கப்படும்.நாமக்கல் மாவட்ட விளையாட்டரங்கில், கடந்த, 26 முதல் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த அரசு அலுவலர்களுக்கான விளையாட்டு போட்டிகளை, கலெக்டர் துர்காமூர்த்தி துவக்கி வைத்தார். மேலும், அவர் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டு விளையாடினார்.மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ், சி.இ.ஓ., மகேஸ்வரி, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் கோகிலா உட்பட பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் என, ஆண்கள் பிரிவில், 378 பேர், பெண்கள் பிரிவில், 176 பேர் என, மொத்தம், 554 பேர் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை