மேலும் செய்திகள்
தடுமாறி விழுந்த மூதாட்டி பலி
12-Aug-2025
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, வட்டமலை பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர், 35; விசைத்தறி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்க உள்ளதால், தன் தாய் அங்கம்மாள், 85, என்பவரை தினமும் மிரட்டி, அடித்து துன்புறுத்தி பணம் வாங்கி மது குடித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, 3:00 மணிக்கு சுரேந்தர், தன் தாயிடம் குடிக்க பணம் கேட்டு தாக்கியுள்ளார். இதில் அங்கம்மாள் பலத்த காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து அங்கம்மாளின் மகள் சுலோச்சனா, 63, அளித்த புகார்படி, குமாரபாளையம் போலீசார், தலைமறைவாக உள்ள சுரேந்தரை தேடி வருகின்றனர்.
12-Aug-2025