சேவல் சண்டை 2 பேருக்கு காப்பு
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் அடுத்த பச்சுடையாம்பட்டி, புதுார் கிராமத்தில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையில் அங்கு சென்ற போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, பணம் வைத்து சேவல் சண்டை நடத்திக்கொண்டிருந்த, அதே பகுதியை சேர்ந்த அருள்மணி, 27, சீனிவாசன், 52, ஆகிய இருவரையும் கைது செய்து, டூவீலர், பணம், இரண்டு சேவல்களை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பி ஓடியவர்கள் குறித்து சேந்தமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.