உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கல்லுாரி பேரவை துவக்க விழா

கல்லுாரி பேரவை துவக்க விழா

நாமக்கல், நாமக்கல் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில், கல்லுாரி பேரவை துவக்க விழா நடந்தது. முதல்வர் மாதவி தலைமை வகித்தார். விலங்கியல் துறை தலைவர் ஷர்மிளாபானு வரவேற்றார். கணினி, ஆங்கில துறைத்தலைவர்கள் எமீமாள் நவஜோதி, அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கல்லுாரி முன்னாள் முதல்வர் பானுமதி வாழ்த்தி பேசினார். தொடர்ந்து பேரவை தலைவர், துணைத்தலைவர், செயலாளர், துணை செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. அதையடுத்து, பேரவை நிர்வாகிகள் விளக்கேற்றி, உறுதிமொழி ஏற்றனர். துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை