உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காதலை ஏற்க மறுத்த தாய் கல்லுாரி மாணவி விபரீதம்

காதலை ஏற்க மறுத்த தாய் கல்லுாரி மாணவி விபரீதம்

ப.வேலுார், பரமத்தி அருகே, கரிச்சிபாளையத்தை சேர்ந்த, 18 வயது மாணவி. இவர், பி.எஸ்சி., கெமிஸ்ட்ரி முதலாமாண்டு படித்து வந்தார். தந்தை இறந்துவிட்டதால், பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், உறவினரான வாலிபர் ஒருவரை, காதலித்து வந்துள்ளார். இதையறிந்த மாணவியின் தாய், காதலை ஏற்க மறுத்து கண்டித்துள்ளார்.இதனால், கடந்த, 3ல் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். படுகாயமடைந்த மாணவி, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம், மாணவி இறந்தார். நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ