உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பள்ளிப்பாளையத்தில்கலர் வேட்டி உற்பத்தி தீவிரம்

பள்ளிப்பாளையத்தில்கலர் வேட்டி உற்பத்தி தீவிரம்

பள்ளிப்பாளையம், டிச. 15-பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில் விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. இப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் துணிகள், லுங்கி, வேட்டி, சேலைகள் உள்ளிட்ட பல வகையாக ஜவுளிகள் இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாக கருப்பு வேட்டி உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது.இதுகுறித்து, நேருநகரை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர் சரவணன் கூறுகையில், ''சபரிமலை சீசனில் ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான கருப்பு நிற வேட்டி தயாரிப்பு கடந்த மாதம் துவக்கப்பட்டது. விற்பனை அதிகரித்துள்ளதால், தொடர்ந்து உற்பத்தியும் நடந்து வருகிறது. தை பொங்கல் முடியும் வரை கருப்பு, சிவப்பு, புளூ, பச்சை உள்ளிட்ட கலர் வேட்டிகள் உற்பத்தி நடக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை