மேலும் செய்திகள்
ஆயுதப்படை போலீசாருக்கு கமாண்டோ பயிற்சி
23-May-2025
நாமக்கல், வடகிழக்கு பருவ மழையில் பாதிக்கப்படுவோரை மீட்கும் வகையில், நாமக்கல் மாவட்ட கமாண்டோ படை போலீசாருக்கு வெள்ள மீட்பு பயிற்சி வகுப்பு, நேற்று முன்தினம் துவங்கி நடந்து வருக்கிறது. மூன்று நாட்கள் நடக்கும் இப்பயிற்சி முகாமில், நேற்று முன்தினம், சென்னை தமிழ்நாடு கமாண்டோ பயிற்சி பள்ளி தலைமை காவலர் சிகன்ராஜ் தலைமையில், சிறப்பு பயிற்சியாளர்கள் ரியாசஸ், ஸ்ரீதர் கொண்ட போலீஸ் குழுவினர், நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சியளித்தனர்.தொடர்ந்து, நேற்று காலை, நாமக்கல் கமலாலய குளத்தில், பெண்கள், ஆண்கள் கமாண்டோ படையை சேர்ந்த, 60 போலீசாருக்கு வெள்ள மீட்பு செய்முறை பயிற்சியளிக்கப்பட்டது. அதில் விசை படகில் சென்று, மழை வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும். காப்பாற்றப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிசை, மருத்துவ முகாமிற்கு விரைந்து செல்லும் வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து, இன்று மாவட்ட போலீஸ் தலைமை அலுவலகத்தில், மூன்றாம் கட்ட பயிற்சியளிக்கப்படுகிறது.
23-May-2025