சாலை விரிவாக்க பணிக்காக மரம் வெட்டும் பணி துவக்கம்
ராசிபுரம்: ராசிபுரம் நெடுஞ்சாலைத்துறையில், ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில், சாலை அகலப்ப-டுத்தும் பணி நடக்கவுள்ளது. ராசிபுரத்தில் இருந்து ஆத்துார் செல்லும் பிரதான சாலையில், காக்காவேரியில் இருந்து சீராப்-பள்ளி வரை, 3.371 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அகலப்ப-டுத்தப்பட உள்ளது. ஏற்கனவே இருந்த, 7 மீட்டர் அகல சாலை, 10 மீட்டராக அதிகரிக்கப்படுகிறது.இதனால், சாலை அகலப்படுத்தும் பணிக்கு இடையூறாக உள்ள மரங்கள், மின் கம்பங்கள் குறித்து நெடுஞ்சாலைத்துறை-யினர் ஆய்வு செய்தனர். முக்கியமாக அகற்ற வேண்டிய மரங்கள் குறித்து வனத்துறையினருடன் இணைந்து நெடுஞ்சாலைத்துறை-யினர் ஆய்வு செய்தனர். வெட்டப்படும் மரங்கள் குறித்த தக-வலை, மாவட்ட பசுமைக்குழுவுக்கு அனுப்பி அனுமதியும் பெற்-றுள்ளனர். இதையடுத்து, நேற்று காக்காவேரி, சீராப்பள்ளி பகு-தியில் இருந்த இடையூறு மரங்களை வெட்டி அகற்றும் பணி நடந்தது.