மேலும் செய்திகள்
பள்ளிகளில் ஆசிரியர் தினவிழா கொண்டாட்டம்
06-Sep-2024
அரசியல் பிரமுகருக்கு மலர் துாவி வரவேற்புமாணவியரை ஈடுபடுத்திய ஆசிரியர் மீது புகார்நாமக்கல், செப். 20-அரசியல் பிரமுகருக்கு மலர் துாவி வரவேற்பளிக்க, அரசு பள்ளி மாணவியரை ஈடுபடுத்திய ஆசிரியர் மீது, துறைரீதியாக நடவடிக்கை எடுக்க, நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, குமாரபாளையம் இந்து முன்னணி நிர்வாகி விக்னேஷ் தலைமையில், நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம், பெரியமணலி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த, 13 அன்று மாணவிகளுக்கு தமிழக அரசின் விலை இல்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. அதில் பங்கேற்க வந்த, நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க., செயலர் மதுரா செந்திலுக்கு வரவேற்பு அளிக்கும் வகையில், பள்ளி மாணவிகளை வரிசையாக நிற்க வைத்து மலர் துாவி வரவேற்றுள்ளனர். இதற்கு காரணமான ஆசிரியர்கள் மீது, துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
06-Sep-2024