கடத்தலில் ஈடுபட்ட லாரியை ஏமாற்றி விற்ற நபர் மீது புகார்
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம், கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார், 33. இவரது தந்தை வேலுமணியிடம், 52, லாரி விற்பனை புரோக்கர்-களான முருகேசன், சுப்ரமணி ஆகியோர், லாரி விற்பனைக்கு உள்ளது என கூறியுள்ளனர். கொங்கணாபுரம் வழியில் ஒருக்காமலை பகுதியில் உள்ள ஒரு லாரி பட்டறையில், கட்சுப்பள்ளியை சேர்ந்த செல்லப்பன் என்-பவருக்கு சொந்தமான லாரியை காட்டியுள்ளனர். லாரியை, 18 லட்சத்து, 25 ஆயிரம் ரூபாய்க்கு விலை பேசினர். நிதி நிறுவ-னத்தில் உள்ள கடன் தொகை, 13 லட்சம் போக, ஐந்து லட்சத்து, 25 ஆயிரம் ரூபாயை உரிமையாளர் வசம் ஒப்படைத்தனர்.ஆனால், இந்த லாரி மணல் கடத்தலில் ஈடுபட்டதாகவும், நீதி-மன்றம் கேட்டு கொண்டதன்படி, லாரியை சிவகுமார் தரப்பினர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். லாரி மீது மணல் கடத்தல் வழக்கு உள்ளது என்பதை மறைத்து, அதை விற்பனை செய்த செல்லப்பன் மீது, சிவகுமார், குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.