உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அரளி வரத்து அதிகரிப்பு விலை குறைவால் கவலை

அரளி வரத்து அதிகரிப்பு விலை குறைவால் கவலை

சேந்தமங்கலம், சேந்தமங்கலம் யூனியனில், நடுக்கோம்பை, ராமநாதபுரம், காரவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அரளி பூக்கள் சாகுபடியில் அதிகம் ஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் இருந்து தினமும் சேலம், நாமக்கல், ஆத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. சில நாட்களாக அரளி பூக்கள் வரத்து அதிகரித்துள்ளதால், கிலோ, 300 ரூபாய்க்கு விற்ற அரளி பூக்கள், தற்போது விலை குறைந்து, 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அரளி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ