உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புதிய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தும் நடவடிக்கைக்கு கண்டனம்

புதிய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தும் நடவடிக்கைக்கு கண்டனம்

நாமக்கல்: 'மத்திய அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தை, தமிழகத்தில் நடை-முறைப்படுத்த, தமிழக அரசு முயற்சி செய்வதற்கு, ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவிப்பதாக' நேரடி நியமனம் பெற்ற முது-கலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, தமி-ழக முதல்வருக்கு மனு அனுப்பி உள்ளார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:தமிழக சட்டசபையில், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ., கேட்ட கேள்-விக்கு, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்தார். அதில், 'மத்திய அரசு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதிய திட்டம் இரண்டிற்கும் மாற்றாக புதிதாக ஒருங்-கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை இப்போது அறிவித்திருக்கின்-றனர். அந்த ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவ-தற்கு, ஒரு புதிய குழுவை முதல்வர் அறிவிப்பார்.அதன் வழிகாட்டுதல்படி, அந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்ப-டுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும்' என்று தெரிவித்துள்ளார்.தற்போதைய முதல்வர், கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவ-ராக இருந்தபோது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவோம் என, வாக்கு-றுதி அளித்தார். தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையிலும் அதனை அறிவித்தனர். அதனை நம்பி தமிழக அரசில் பணிபுரியும் லட்சக்-கணக்கான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தி.மு.க., ஆட்-சிக்கு வர தங்களது ஓட்டுகளையும், தங்கள் குடும்ப ஓட்டுக-ளையும் அளித்தனர்.சென்னை தீவுத்திடலில், 'ஜாக்டோ ஜியோ' சார்பில் நடைபெற்ற வாழ்வாதார மாநாட்டிலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களால் தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம் என முதல்வர் வெளிப்படை-யாகவே பேசினார்.இந்நிலையில், சட்ட சபையில் பேசிய அமைச்சர், பழைய ஓய்வூ-திய திட்டத்தை அமல்படுத்துவதை பற்றி எதையும் தெரிவிக்-காமல், மத்திய அரசு கொண்டு வர உள்ள ஒருங்கிணைந்த ஓய்வூ-திய திட்டத்தை, தமிழகத்தில் அமல்படுத்துவதற்கான வாய்ப்பு-களை ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்கப்படும் என அறிவித்தி-ருப்பது கண்டனத்திற்குரியது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ