மேலும் செய்திகள்
இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
01-Nov-2025
நாமக்கல், நாமக்கல் மாநகர காங்., சார்பில், முன்னாள் பிரதமர் இந்திராவின், 41ம் ஆண்டு நினைவு தினம், நேற்று அனுசரிக்கப்பட்டது. நாமக்கல் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே அமைந்துள்ள நேரு பூங்காவில் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு, கிழக்கு மாவட்ட காங்., தலைவர் சித்திக் தலைமையில் மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது.தொடர்ந்து, இந்திரா பிரதமராக பதவி வகித்தபோது, இந்திய நாட்டுக்கும், தமிழகத்துக்கும் அவரால் ஏற்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மாநகர காங்., தலைவர் மோகன், கொல்லிமலை வட்டார தலைவர் குப்புசாமி உள்பட கட்சியினர் பலர் பங்கேற்றனர்.
01-Nov-2025