மாவட்டத்தில் தொடர் மழை: 3 நாளில் 300.60 மி.மீ., பதிவு
நாமக்கல்: தமிழகத்தில், வளிமண்டல சுழற்சி காரணமாக, பல்வேறு மாவட்-டங்களில், கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகி-றது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, மூன்று நாட்க-ளாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், லேசான மற்றும் கனமழை பெய்தது. அதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில், மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.நாமக்கல் நகரில், நேற்று காலை முதல், வானம் மேகமூட்டத்-துடன் காணப்பட்டது. மழை வரும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்ப்புக்கு ஏற்ப, மாலை, 5:30 மணிக்கு, லேசான மழை பெய்ய துவங்கியது.தொடர்ந்து அரை மணி நேரம் நீடித்தது. அதேபோல், மோகனுார் பகுதியிலும், மாலை, 5:30 மணிக்கு, கனமழை பெய்தது. அதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.நேற்று முன்தினம் மாலை, 6:00 முதல், நேற்று காலை, 6:00 மணி வரை மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்-டரில்) பின்வருமாறு:குமாரபாளையம், 2, மங்களபுரம், 19, நாமக்கல், 3, புதுச்சத்திரம், 15, ராசிபுரம், 31.60, கலெக்டர் அலுவலகம், 28, கொல்லிமலை, ஒன்று என, மொத்தம், 99.60 மி.மீ., மழை பெய்துள்ளது. கடந்த, 1ல், 132.30 மி.மீ., நேற்று முன்தினம், 69 என, மூன்று நாட்களில், மாவட்டம் முழுவதும், 300.90 மி.மீ., மழை பெய்-துள்ளது. ராசிபுரத்தில் மட்டும், 131.60 மி.மீ., மழை பெய்துள்ள குறிப்பிடத்தக்கது.