உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.2.71 லட்சத்திற்கு கொப்பரை வர்த்தகம்

ரூ.2.71 லட்சத்திற்கு கொப்பரை வர்த்தகம்

மல்லசமுத்திரம்: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்லசமுத்திரம் கிளையில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை கொப்பரை தேங்காய் ஏலம் நடக்கிறது. அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில் சூரியகவுண்டம்பாளையம், பள்ளிப்பட்டி, கொளங்கொண்டை, ராமாபுரம், பருத்திப்பள்ளி, மாரம்பாளையம், சோமணம்பட்டி, மங்களம், மேல்முகம், சின்னகாளிப்பட்டி, அம்மாபட்டி, கரட்டுவளவு, பள்ளக்குழி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தலா, 60 கிலோ எடை கொண்ட, 35 மூட்டை கொப்பரை தேங்காயை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், முதல் தரம் கிலோ, 206 ரூபாய் முதல், 229.65 ரூபாய்; இரண்டாம் தரம், 180.10 ரூபாய் முதல், 195.10 ரூபாய் என, மொத்தம், 2.71 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரம், 1.68 லட்சம் ரூபாய்க்கு விற்ற நிலையில், நேற்று நடந்த ஏலத்திற்கு வரத்து அதிகரிப்பால் விற்பனை அதிகரித்தது. அடுத்த ஏலம் வரும், 20ல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி