மேலும் செய்திகள்
ரூ.10 லட்சத்திற்கு பருத்தி ஏலம்
28-May-2025
நாமக்கல், நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில், நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம்(என்.சி.எம்.எஸ்.,) செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடக்கிறது. இங்கு, நாமக்கல், மோகனுார், வளையப்பட்டி, எருமப்பட்டி, பவித்திரம், வரகூர், சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி, பேளுக்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, புதுச்சத்திரம், வேலகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த பருத்தியை கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர். இதில், பல்வேறு பகுதியை சேர்ந்த வியாபாரிகள், ஏலத்தில் கலந்துகொண்டு பருத்தியை கொள்முதல் செய்கின்றனர். அதன்படி, நேற்று நடந்த பருத்தி ஏலத்தில், 1,230 மூட்டை பருத்தியை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், ஆர்.சி.ஹெச்., ரக பருத்தி குவிண்டால், 7,119 ரூபாய் முதல், 7,890 ரூபாய்; கொட்டு மட்ட ரகம், 4,399 ரூபாய் முதல், 5,099 ரூபாய் என, மொத்தம், 31 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
28-May-2025