ரூ.2 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்
ரூ.2 லட்சத்திற்கு பருத்தி வர்த்தகம்மல்லசமுத்திரம், நவ. 15-மல்லசமுத்திரத்தில், இரண்டு லட்சம் ரூபாய்க்கு பருத்தி வர்த்தகம் நடந்தது.திருச்செங்கோடு, வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்றுமுன்தினம் பருத்தி ஏலம் நடந்தது. மொத்தம், 110 மூட்டைகள் வரத்தானது. இதில், பி.டி.,ரகம், 6,760 முதல், 7,480 ரூபாய் வரையிலும், கொட்டுபருத்தி, 3,720 முதல் 4,540 ரூபாய் வரையிலும் என மொத்தம், இரண்டு லட்சத்திற்கு ஏலம் நடந்தது.