உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தொட்டியில் விழுந்த மாடு மீட்பு

தொட்டியில் விழுந்த மாடு மீட்பு

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, ஜீவாசெட் அடுத்த காட்டு பகுதியில், நேற்று மதியம் சில மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தனர். அப்பகுதியில், ஐந்தடி ஆழத்தில் தொட்டி ஒன்று இருந்தது. அங்கு புற்களை மேய்ந்து கொண்டிருந்த மாடு ஒன்று, தொட்டி இருப்பது தெரியாமல் அதற்குள் தவறி விழுந்தது. இதையறிந்த மக்கள், வெப்படை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கயிறு கட்டி தொட்டியில் இறங்கி, தவித்து கொண்டிருந்த மாட்டை, ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ