உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சித்தர்மலையில் உழவாரப்பணி

சித்தர்மலையில் உழவாரப்பணி

நாமக்கல்: நாமக்கல் சித்தர் மலையில், கோவை ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா முன்னாள் மாணவர்கள், 50க்கும் மேற்பட்டோர் உழவாரப் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நாமக்கல் மனவளக்கலை மன்றம் சார்பில் சிறப்பு தியான நிகழ்ச்சி நடந்தது.இதில், சேலம், நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் (ஓய்வு) உதயகுமார் வரவேற்றார். பசுமை தில்லை சிவக்குமார், இன்ஜினியர் மாணிக்கம் ஆகியோர் அறிமுக உரையாற்றினர். உழவாரப் பணியை முதுநிலை பேராசிரியர் உழவன் தங்கவேலு தொடங்கி வைத்தார். ஆன்மிக பைக்கொழுந்து குருவாயூரப்பன், ராமலிங்கம் ஆகியோர் சித்தர் மலை கோவிலின் வரலாறு, உழவாரப் பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி