உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சேதமான பள்ளி சுற்றுச்சுவர் உபகரணங்கள் திருட வாய்ப்பு

சேதமான பள்ளி சுற்றுச்சுவர் உபகரணங்கள் திருட வாய்ப்பு

எலச்சிபாளையம், எலச்சிபாளையம் யூனியன், மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியின் கிழக்கு பகுதியில் உள்ள சுற்றுச்சுவர், சில ஆண்டுகளுக்கு முன் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. அதன்பின், அந்த சுற்றுச்சுவரை சரிசெய்யவில்லை. இதனால், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் பள்ளியில், மர்மநபர்கள் எளிதில் உள்ளே புகுந்து கணினி, விளையாட்டு உபகரணங்கள், தளவாட பொருட்கள் உள்ளிட்டவற்றை எளிதில் திருடிச்செல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.இந்த சுற்றுச்சுவரை சீரமைக்க கோரி, அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சுற்றுவரை உயர்த்தி, 'பீங்கான்' பதிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை