உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஆபத்தான மின் பெட்டி

ஆபத்தான மின் பெட்டி

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த ஆண்டகலுார் கேட் பகுதி, சேலம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. முக்கியமாக, இங்குள்ள அரசு கல்லுாரி, கால்நடை மருந்தகம், பள்ளிக்கூடம் என, அரசு அலுவலகங்கள் இருப்பதால் இப்பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும். இங்குள்ள உயர் மின் விளக்குகளுக்கு தேவையான மின் இணைப்பு கொடுக்கும் பெட்டி உள்ளது. இந்த பெட்டி ஆபத்தான முறையில் திறந்த நிலையிலேயே உள்ளது.மாணவர்கள், பொதுமக்கள் அதிகம் நின்று செல்லும் இந்த இடத்தில், ஆபத்தான முறையில் மின் பெட்டி திறந்திருப்பதால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பாதுகாப்பான முறையில் மின் இணைப்பு பெட்டியை மூடி வைக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை